சனி, 26 அக்டோபர், 2013

எலும்பு வலு உண்டாக:

 எலும்பு வலு உண்டாக:
************************
 உளுந்து 100 கிராம், எள்ளு 100 கிராம், பச்சரிசி 200 கிராம், மிளகு 20 கிராம், சோம்பு 20 கிராம் எடுத்துக்கொண்டு, அனைத்துப் பொருட்களையும் தனித் தனியே வறுத்து ஒன்றாக்கிக் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு பொடியை எடுத்து, தண்ணீர் விட்டு அடை பதத்திற்குப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். சிறிது வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி, ஏற்கெனவே பிசைந்து வைத்துள்ள மாவுடன் கலந்து, சிறிது உப்பு சேர்த்து அடைபோல் செய்து சாப்பிடவும். 48 நாட்கள் சாப்பிட எலும்பு வலுவடையும். எலும்பைப் பற்றிய பிணிகள் அனைத்தும் தீரும்.

சனி, 6 ஏப்ரல், 2013

கண்களை கழுவ மூலிகை

கண்களை கழுவ மூலிகை
கண் நோய்களுக்கு காரணம்
*கண்களுக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுப்பது ,கணினி,தொலை காட்சி பார்ப்பது 
* கொட்டாவி, கண்ணீர், தும்மல், ஏப்பம், வாந்தி போன்றவற்றை தடுத்து நிறுத்த முயற்சிப்பதால், மூளையிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் நரம்புகளில் ஏற்படும் தாக்கம்,..
 *ஓயாமல் புத்தகம் படிப்பது
*உடல் சூடு
*முருங்கை கீரை,அகத்தி 

சோம்பு கஷாயம் கண்களை கழுவ, கண் எரிச்சல் குறையும்.
கண்ணில் வெண் விழி சிவந்து காணப்படுதல், கண் எரிச்சல், கண்ணில் வலி, கண் உறுத்துதல், கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம் ஆகியவை கண் அழற்சிக்குரிய அறிகுறிகள் ஆகும். கண்ணில் அடிபட்டாலும் கண் அழற்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற கண் பாதிப்பு ஏற்பட்டால், நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் மூலம் கண்களை தனித்தனியாக கழுவ வேண்டும். நன்றாக ஓய்வு எடுப்பதும், நன்றாக தூங்குவதும் முக்கியம். தாய்ப்பாலை கண்களில் விடலாம். தூய ஆமணக்கு எண்ணெயை ஒரு துளி அளவில் கண்ணில் விடலாம். திரிபலா சூரணத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஆறிய பின்னர் வடிகட்டி கண்களை கழுவுதல், காலையில் முகம் கழுவும் தண்ணீரில் சிறிது பச்சை கற்பூரம் போட்டு கழுவலாம் என்பதும் மருத்துவ அறிவுரை ஆகும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்பட்ட பலகறை பற்பம் 200 மில்லி கிராம் முதல் 300 மில்லி கிராம் வரை எடுத்து, 1/4 தம்ளர் பாலில் கலந்து தினமும் 3 வேளை கொடுக்கலாம். 2 முதல் 3 துளிகள் படிகப் பன்னீரை கண்ணில் தினமும் இரு வேளை விடலாம்.
கண் துடிப்பு மற்றும் கண் நோய்கள் அகல 
தசமூல ரஸôயனம் எனும் லேகிய மருந்தை சுமார் 10 கிராம் இரவு படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும்.
  
அறுகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

காய்ச்சி ஆற்றிய நீர் 
சோம்பு நீர் 
பலை நீர் 
ரோஜா நீர் 
பன்னீர் 
கண்ணிலிடு மருந்து